Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

8ஆவது முறையாக விம்பிள்டன் விருதைப் பெறும் ராஜர் ஃபெடரர்

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில், சுவிச்சர்லாந்தின்  ராஜர் ஃபெடரரும், குரோஷியாவின் மாரின் செலிக்கை வீழ்த்தி, 8ஆவது முறையாக விம்பிள்டன் விருதை வென்றுள்ளார். 

வாசிப்புநேரம் -
8ஆவது முறையாக விம்பிள்டன் விருதைப் பெறும் ராஜர் ஃபெடரர்

(படம்: REUTERS/Andrew Couldridge)

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில்,
சுவிச்சர்லாந்தின்  ராஜர் ஃபெடரர், குரோஷியாவின் மாரின் செலிக்கை வீழ்த்தி, 8ஆவது முறையாக விம்பிள்டன் விருதை வென்றுள்ளார். 

செட் விவரம்:

6-3,

6-1,

6-4.

இடதுகாலில் கொப்புளம் ஏற்பட்டநிலையில் தம்முடன் பொருதிய மாரின் செலிக், அபாரமாக ஆடியதாக ஃபெடரர் பாராட்டினார்.

2012ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் விம்பிள்டன் போட்டிகளில் வாகை சூடியிருக்கும் ஃபெடரர், இத்துடன் 19 Grand Slam விருதுகளை வென்றுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியப் பொது விருதையும் அவர் தட்டிச்சென்றார்.

இதற்கு முன்னர் 1889ஆம் ஆண்டு வில்லியம் ரென்ஷாவும், 2000ஆம் ஆண்டு பீட் சம்பிரஸ்ஸும், விம்பிள்டன் ஒற்றையர் பிரிவில் தங்கள் 7ஆவது விருதை வென்றனர்.

அவர்களைப் பின்னுக்குத் தள்ளி, ராஜர் ஃபெடரர் 8ஆவது முறை வெற்றிக்கனியைச் சுவைத்துள்ளார்.

இருப்பினும், மகளிர் பிரிவில் மார்டினா நவ்ரதிலொவா, 9 முறை அந்த விருதைப் பெற்றுள்ளார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்