Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 8 பதக்கங்கள்

நீச்சல் வீரர், டோ வை சூன், ஆண்களுக்கான 100 மீட்டர் எதேர்ச்சை பாணி நீச்சல் பிரிவில், தங்கம் வென்று, ஆசியான் விளையாட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில் சிங்கப்பூருக்கு 8 பதக்கங்கள்

(படம்: Najeer Yusof/TODAY)

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறும் உடற்குறையுள்ளோருக்கான ஆசியான் விளையாட்டுகளில், சிங்கப்பூரின் விளையாட்டு வீரர்கள் 8 பதக்கங்களை வென்றுள்ளனர்.

நீச்சல் வீரர், டோ வை சூன், ஆண்களுக்கான 100 மீட்டர் எதேர்ச்சை பாணி நீச்சல் பிரிவில், தங்கம் வென்று, ஆசியான் விளையாட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீட்டர் எதேர்ச்சை பாணி நீச்சல் போட்டியில், திரேசா கோவும் டானியல் மோயும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

சிங்கப்பூரின் மிதிவண்டி வீரர்களும் தங்களது முத்திரைகளைப் பதிக்கத் தவறவில்லை.

பெண்களுக்கான 3,000 மீட்டர் மிதிவண்டி ஓட்டும் பிரிவில், சிங்கப்பூரின் சாரா டானும் எமிலி லீயும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

ஆண்களுக்கான 4,000 மீட்டர் மிதிவண்டி ஓட்டும் பிரிவில், சிங்கப்பூரின் ஜேசன் இங்கும் கேல்வின் சிம்மும் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

போக்கேஷியா விளையாட்டின் BC3 பிரிவில் கலந்துகொண்ட ஃபே லிம்மும் டோ சு நிங்கும் அடங்கிய குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்