Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து - தொடர்ந்து 6 உலகக் கிண்ணங்களில் ஜப்பான்!

B பிரிவில் ஆஸ்திரேலியாவை 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் வென்று அடுத்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குச் செல்வதை உறுதிசெய்தது ஜப்பான்.

வாசிப்புநேரம் -

B பிரிவில் ஆஸ்திரேலியாவை 2-0 எனும் கோல் எண்ணிக்கையில் வென்று அடுத்த ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிக்குச் செல்வதை உறுதிசெய்தது ஜப்பான்.

1998 போட்டி வரை உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறாத ஜப்பான் அதன் பின்னர் தொடர்ந்து 6 முறை போட்டிக்குச் சென்றிருப்பதைப் பாராட்டவேண்டும்.

வரும் செவ்வாய்க்கிழமை பின்னிரவு ஒன்றரை மணிக்கு இரண்டாம் இடத்தில் உள்ள சவுதி அரேபியாவைச் சந்திக்கிறது ஜப்பான்.

செவ்வாய்க்கிழமை பின்னிரவு மூன்றாம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா தாய்லந்துடன் மோதுகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் ஒரே புள்ளிகள்.

A பிரிவில் ஈரானும் தென்கொரியாவும் கோலின்றி சமநிலை கண்டன. பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறது ஈரான், இரண்டாம் இடத்தில் தென்கொரியா. இம்முறை உலகக் கிண்ணத் தகுதி ஆட்டங்களில் அவ்வளவு சரியாக ஆடவில்லை தென்கொரியா.

படம்: AFP

மூன்றாம் இடத்தில் உள்ள சிரியா கத்தாரை 3-1 என வென்றது. நான்காம் இடத்தில் இருக்கும் உஸ்பெக்கிஸ்தான் சீனாவிடம் 1-0 எனத் தோல்வியுற்றது.

சிரியாவுக்கும் உஸ்பெக்கிஸ்தானுக்கும் 12 புள்ளிகள், தென்கொரியாவுக்கு 14 புள்ளிகள்.

செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்கு ஈரானும் சிரியாவும் மோதுகின்றன, உஸ்பெக்கிஸ்தான் தென்கொரியாவைச் சந்திக்கிறது. இரு ஆட்டங்களும் அவற்றில் ஈடுபட்டுள்ள 4 அணிகளின் நிலையைப் பெரிதும் மாற்றியமைக்கக்கூடியவை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்