Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

காற்பந்து - அபாய நிலையில் அர்ஜென்டீனா

லத்தீன் அமெரிக்கக் கண்டத்துக்கான தகுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவும் உருகுவேயும் கோலின்றி சமநிலை கண்டன. 

வாசிப்புநேரம் -

லத்தீன் அமெரிக்கக் கண்டத்துக்கான தகுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவும் உருகுவேயும் கோலின்றி சமநிலை கண்டன.

பட்டியிலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது அர்ஜென்டீனா. முதல் 4 இடங்களுக்குள் வந்தால்தான் அணி சுமுகமாக உலக் கிண்ணப் போட்டிக்குச் செல்லமுடியும். இல்லாவிடில் playoff தகுதிச் சுற்றுக்குச் சென்று அதை வெல்லவேண்டிய நிலை ஏற்படும்.

படம்: AFP

சிங்கப்பூர் நேரப்படி வரும் புதன்கிழமை காலை ஏழரை மணிக்கு அர்ஜென்டீனா வெனிசுவேலாவைச் சந்திக்கிறது.

நான்காம் இடத்தில் உள்ள சிலி பராகுவேயிடம் 3-0 எனும் கோல் எண்ணிக்கையில் தோல்வியுற்றதால் அர்ஜென்டீனா பெருமூச்சுவிட்டுக்கொண்டது. இரு அணிகளுக்கும் ஒரே புள்ளிகள்தான். சிலி, வரும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு பொலிவியாவைச் சந்திக்கிறது.

முதலிடத்தை வகிக்கும் பிரேசில் எக்குவடோரை 2-0 என வென்றது. சென்ற போட்டியில் சொந்த மண்ணில் அவமானப்பட்ட பிரேசில் இப்போது படிப்படியாக மீண்டுவருகிறது.

படம்: AFP

செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டாம் இடத்தில் இருக்கும கொலம்பியாவுடன் மோதும் பிரேசில் அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறுவது உறுதி!

இன்றைய ஆட்டத்தில் கொலம்பியாவுக்கும் வெனிசுவேலாவுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் கோலின்றி சமநிலையில் முடிந்தது.

மற்றோர் ஆட்டத்தில் ஆறாம் இடத்தில் இருக்கும் பெரு பொலிவியாவை 2-1 என வென்றது. 1982 போட்டிக்குப் பிறகு இன்று வரை உலகக் கிண்ணத்திற்குத் தகுதிபெறாத பெருவுக்கு அடுத்த ஆண்டுப் போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் இன்னும் உள்ளன.

அணி, புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு எக்குவடோருடன் பொருதுகிறது.

லத்தீன் அமெரிக்கக் கண்டப் பட்டியலில் பிரேசில், கொலம்பியா, உருகுவே, சிலி, அர்ஜென்டீனா, பெரு, பராகுவே, எக்குவடோர் ஆகியவை முதல் 8 இடங்களை வகிக்கின்றன. இவற்றில் எந்த 4 அணிகளும் பிரேசிலுடன் சேர்ந்து உலகக் கிண்ணப் போட்டிக்குச் செல்லக்கூடும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்