தென்கிழக்காசியப் போட்டிகள்: சிங்கப்பூரின் ரக்பி அணிகளுக்கு வெள்ளிப் பதக்கங்கள்
சிங்கப்பூரின் ரக்பி ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தத்தம் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளன.
சிங்கப்பூரின் ரக்பி ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தத்தம் பிரிவுகளில் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளன.
இறுதிச் சுற்றில் சிங்கப்பூரின் ஆண்கள் அணி, மலேசிய அணியிடம்
22-7 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றது. 2015-இல் சிங்கப்பூர் அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
சிங்கப்பூரின் பெண்கள் அணி, தாய்லந்து அணியிடம் 17-10 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வி கண்டது.
2015ஆம் ஆண்டிலும் இறுதிச் சுற்றில் அவ்விரு அணிகளும் பொருதின. அப்போது 39-0 என்ற எண்ணிக்கையில் சிங்கப்பூர் தோல்வி கண்டது.