Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசியப் போட்டிகள்: சிங்கப்பூரர்கள் பங்குபெறும் இன்றைய நீச்சல் இறுதிச்சுற்றுகள்

தென்கிழக்காசியப் போட்டிகளின் நீச்சல் இறுதிச்சுற்றுகளுக்குச் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் சிலர் முன்னேறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியப் போட்டிகள்: சிங்கப்பூரர்கள் பங்குபெறும் இன்றைய நீச்சல் இறுதிச்சுற்றுகள்

(படம் : GABRIEL BOUYS/AFP)

கோலாலம்பூர், மலேசியா: தென்கிழக்காசியப் போட்டிகளின் நீச்சல் இறுதிச்சுற்றுகளுக்குச் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் சிலர் முன்னேறியுள்ளனர்.

இறுதிச் சுற்றுப் பங்கேற்பாளர்களுக்கு
இன்று காலை தேர்வுச் சுற்று நிறைவடைந்தது.

200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் அங்கத்தைச் சிங்கப்பூரின் குவா செங் வன் 2:05.56 விநாடிகளில் முடித்து 5ஆம் நிலையில் வந்தார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த மற்றொரு நீச்சல் வீரரான ஓங் ஜுங் யீ (Ong Jung Yi) 2:08.32 விநாடிகளில் முடித்து 7ஆம் நிலையில் வந்தார்.

பெண்களுக்கான 50 மீட்டர் நெஞ்சுநீச்சலை ரொயேன் ஹோ 1.8 விநாடிகளில் முடித்து, முதலிடம் வகித்தார்.

அதே சுற்றில் பங்குபெற்ற 11 விளையாட்டாளர்களுக்கு இடையிலான அந்தப் போட்டியில் மற்றொரு சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனையான சமந்தா யோ, மூன்றாம் நிலையில் வந்தார்.

சுற்றை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 32.29 விநாடிகள்.

பெண்களுக்கான 400 மீட்டர் பலபாணி நீச்சல் சுற்றை முடிக்க, ரேச்சல் செங், 4:22.34s விநாடிகள் எடுத்துக்கொண்டு ஆறாம் நிலையிலும் கான் சிங் ஹுவீ, 4:25.57 விநாடிகள் எடுத்துக்கொண்டு எட்டாம் நிலையிலும் உள்ளனர்.

நீச்சலுக்கான இறுதிச் சுற்றுகள் உள்ளூர் நேரப்படி இன்றிரவு 7 மணிக்குத் தொடங்கும்.

புக்கிட் ஜலீல் தேசிய நீச்சல் நிலையத்தில் போட்டிகள் அவை நடைபெறும்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்