Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென்கிழக்காசிய விளையாட்டுகள்: காற்பந்துப் போட்டியிலிருந்து சிங்கப்பூர் வெளியேறியது

சிங்கப்பூரின் 22 வயதுக்குட்பட்ட  விளையாட்டாளர்களைக்கொண்ட தேசியக் காற்பந்து அணி, தென்கிழக்காசிய விளையாட்டுகளின் அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லத் தவறியுள்ளது.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர்: சிங்கப்பூரின் 22 வயதுக்குட்பட்ட விளையாட்டாளர்களைக்கொண்ட தேசியக் காற்பந்து அணி, தென்கிழக்காசிய விளையாட்டுகளின் அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லத் தவறியுள்ளது.

நேற்றிரவு, மலேசியா, மியன்மார் அணியை 3 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதைத் தொடர்ந்து சிங்கப்பூர், போட்டியிலிருந்து வெளியேற நேரிட்டது.  அந்த ஆட்டத்தைக் காண ஷா அலாம் விளையாட்டரங்கில் 75, 000 ரசிகர்கள் திரண்டனர்.

புள்ளிக் கணக்கின்படி, சிங்கப்பூர் அரையிறுதிச் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறுவதற்கு மியன்மார், மலேசியாவை வெல்ல வேண்டியிருந்தது.

மலேசியாவுக்கு தனபாலன் நடராஜா 2 கோல்களையும் சஃபாவி ரஷிட் (Safawi Rasid) 1 கோலையும் புகுத்தினர்.

மியன்மாருக்குக் கோலைப் புகுத்தியவர் தான் பயிங் (Than Paing).

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்