Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பிரிமியர் லீக் 2016-17: ஓர் அலசல்

இந்தப் பிரிமியர் லீக் பருவம் நிறைவுக்கு வந்துள்ளது. லீக் கிண்ணத்தை வென்றது செல்சி. இரண்டாம் இடத்தைப் பிடித்தது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். மூன்றாவது இடத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி, நான்காம் இடத்தில் லிவர்ப்பூல்.

வாசிப்புநேரம் -

இந்தப் பிரிமியர் லீக் பருவம் நிறைவுக்கு வந்துள்ளது. லீக் கிண்ணத்தை வென்றது செல்சி. இரண்டாம் இடத்தைப் பிடித்தது டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர். மூன்றாவது இடத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி, நான்காம் இடத்தில் லிவர்ப்பூல்.

ஆர்சனல், இந்தப் பருவம் ஐந்தாம் இடத்தில் முடித்தது. ஆறாம் இடத்தில் மென்செஸ்ட்டர் யுனைட்டட்.

சென்ற பருவம் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய லெஸ்ட்டர் சிட்டி இம்முறை 12ஆம் இடத்தில் வந்துள்ளது.

21 ஆண்டுகளுக்கு முன் ஆர்சனல் நிர்வாகியாகப் பதவியேற்றார் ஆர்சீன் வெங்கர். இந்தக் காலக்கட்டத்தில் அணி, முதன்முறையாக முதல் 4 இடங்களுக்குக் கீழ் முடித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக லீகில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது ஆர்சனல்.

விறுவிறுப்பாக அமையவில்லை என்றாலும் இந்தப் பருவத்தில் ஒன்றை நன்கு உணரமுடிந்தது. கடந்த சில ஆண்டுகளாகப் பணத்தை அதிகம் செலவிட்டு நட்சத்திர ஆட்டக்காரர்களை வாங்கிக் குவித்தால் எதையும் சாதிக்கலாம் என்ற மனப்போக்கு தாண்டவமாடியது. கடந்த ஈராண்டாக அந்தத் தத்துவம் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை.

இது, ரசிகர்கள் குறிப்பாக நடுநிலை ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி எனச் சொல்லலாம். எந்த அணியும் ஓரளவு பணம் இருந்தால்தான் தொடர்ந்து சிறப்பாக இயங்கமுடியும், உண்மைதான். ஆனால் அதற்கென பணத்தை விரையமாக்கினால்தான் கிண்ணங்களைக் குவிக்கமுடியும் என்ற போக்கு மாறுவது அவசியம்!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்