Images
  • 220817 rohanne
    (படம்: Noor Farhan)

தென்கிழக்காசிய விளையாட்டுகள் - சிங்கப்பூரர் ரொவேன் ஹோவுக்குத் தங்கம்

சிங்கப்பூரின் நீச்சல் வீராங்கனை ரொவேன் ஹோ, 50 மீட்டர் நெஞ்சு நீச்சலில் தங்கப் பதக்கத்தை வென்றார். 

போட்டியை முடிக்க அவர் எடுத்துகொண்ட நேரம் 31.29 ஒன்பது வினாடி.

புதிய தேசியச் சாதனையையும், தென்கிழக்காசிய விளையாட்டுகளில் புதிய சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்.

24 வயது ரொவேன் ஹோ தமது சொந்தச் சாதனை நேரமான 31.45 வினாடியை முறியடித்தார்.

மலேசியாவின் (Jinq En Phee) ஜிங் என் ஃபீ வெள்ளிப் பதக்கத்தையும், சிங்கப்பூரர் (Samantha Yeo) செமந்தா இயோ வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

உங்கள் கருத்து

Top