Images
  • 220817 shanthi
    (படம்: Toggle)

தென் கிழக்காசிய விளையாட்டுகள் - திடல்தட வீராங்கனை ஷாந்தி பரேரா புதிய சாதனை

தென் கிழக்காசிய விளையாட்டுகளில் சிங்கப்பூரின் திடல்தட வீராங்கனை ஷாந்தி பரேரா புதிய தேசியச் சாதனையைப் படைத்திருக்கிறார்.

பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் தேர்வுச் சுற்றில் 11 புள்ளி ஏழு மூன்று விநாடியில் முடித்து தனது முன்னைய தேசியச் சாதனையை அவர் முறியடித்தார்.

முன்னைய சாதனை நேரம் 11 புள்ளி எட்டு பூஜ்யம் விநாடி.

ஷாந்தி பரேரா அவர் பங்கேற்ற தேர்வுச் சுற்றில் இரண்டாவதாக வந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார். மலேசியாவின் ஹுஸ்னியா சுல்கிஃப்லி முதலிடத்தைப் பிடித்தார். அவரது நேரம் 11 புள்ளி ஆறு ஒன்று விநாடி.

இறுதிச் சுற்று இன்றிரவு நடைபெறுகிறது.

2015-ல் நடைபெற்ற தென் கிழக்காசிய விளையாட்டுகளில் ஷாந்தி பரேரா, 100 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கத்தையும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.  

உங்கள் கருத்து

Top