Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

ஆசியக் காற்பந்துச் சம்மேளனத்தின் லீக் காற்பந்து முறையைச் சீரமைப்பதற்கு உதவியாக வெளிநாட்டு நிபுணர்கள் நியமனம்

சிங்கப்பூர் காற்பந்து அதிகாரிகள்  குடியரசின் லீக் காற்பந்து முறையைச் சீரமைப்பதற்கு உதவும் வகையில், ஆசியக் காற்பந்துச் சம்மேளனம்,வெளிநாட்டு நிபுணர்களை நியமிக்கவிருக்கிறது. அந்தத் தகவலை ஆசியக் காற்பந்துச் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் விண்ட்சர் ஜான் வெளியிட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -

உள்ளூர் அதிகாரிகளைச் சந்தித்த திரு. விண்ட்சர், ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பல நிபுணர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

UEFAவுடன் ஆசியக் காற்பந்துச் சம்மேளனம் இணக்கக் குறிப்பில் கையெழுத்திட்டுள்ளதால் ஐரோப்பாவில் இருந்து நிபுணர்களைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பிருப்பாத அவர் கூறினார். தமது குழுவுடன் கலந்தாலோசித்து சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியில் கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 எஸ் லீக் காற்பந்துப் போட்டிகளை தனியார்மயப்படுத்துவதும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் தலைவர் லிம் கிய தோங் ஆசியக் காற்பந்துச் சம்மேளனம் ஆலோசகரை தந்து அவருக்கு சம்பளம் கொடுக்கவும் ஒப்புக்கொணடுள்ளது என்று தெரிவித்தார்.   நியமிக்கப்படும் ஆலோசகர் எஸ்  லீக் காற்பந்துப் போட்டிகளைத் தனியார் மயப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வார் என்றும் திரு.லிம் குறிப்பிட்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்