Images
  • 240817 sea games swin
    (படம்: Noor Farhan)

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நாடுகளின் பதக்க நிலவரம்

மலேசியா 50 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

37 வெள்ளி, 32 வெண்கலப் பதக்கங்களுடன் அதன் மொத்தப் பதக்க எண்ணிக்கை 119.

நேற்றைய நீச்சல் போட்டிகளில் சிங்கப்பூர் மேலும் சில பதக்கங்ளை வென்றது.
போட்டியில் ஜோசப் ஸ்கூலிங் தனது மூன்றாவது தங்கப்பதக்கத்தை வென்றார்.

ஆண்கள் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் அவர் புதிய தென் கிழக்காசிய விளையாட்டுகள் சாதனை நேரத்தில் முதலாவதாக வந்தார்.

போட்டியை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 51.38 விநாடி.

பெண்கள் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியில் சிங்கப்பூரின் குவா டிங் வென் மூன்றாம் முறையாகத் தங்கப்பதக்கம் வென்றார்.


போட்டியை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் 55.74 விநாடி.

அவற்றோடு சிங்கப்பூர் இதுவரை 27 தங்கங்கள் பெற்றுள்ளது.

அதன்படி, சிங்கப்பூர் இரண்டாவது நிலையில் உள்ளது.

23 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் சிங்கப்பூரின் மொத்தப் பதக்க எண்ணிக்கை 74.

மூன்றாவது நிலையில் உள்ள வியட்நாம் 27 தங்கப் பதக்கங்களுடன், 19 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

அதன் மொத்தப் பதக்க எண்ணிக்கை 70. 

உங்கள் கருத்து

Top