Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

FA கிண்ணக் காற்பந்து

செல்சி, ஆர்சனல் இரண்டும், இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளன.

வாசிப்புநேரம் -

செல்சி, ஆர்சனல் இரண்டும், இறுதியாட்டத்திற்கு முன்னேறியுள்ளன.

சனிக்கிழமை, செல்சி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்ரை, நான்குக்கு இரண்டு எனும் கோல் கணக்கில் வென்றது.

கவனக்குறைவுடன் ஆடியது ஸ்பர்ஸ்.

அதைச் சாதகமாக்கிக்கொண்ட செல்சி முற்பாதியில் இரண்டுக்கு ஒன்று எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.

51ஆவது நிமிடத்தில் ஸ்பர்ஸ் மறுபடியும் மீண்டுவந்தது.

பின்னர் விழித்துக்கொண்டது செல்சி.

தனது அனைத்து சக்தியையும் கொண்டு பந்தை வலைக்குள் பாய்ச்சினார் நெமான்யா மேட்டிச்.

சென்ற வாரம் பிரிமியர் லீகில் மென்செஸ்ட்டர் யுனைட்டட் செல்சியைத் திக்குமுக்காடவைத்தது.

அது சிறிய சரிவே, தான் பலவீனமான அணி அல்ல என்ற வீம்புடன் ஆடியது செல்சி.

நேற்று மற்றோர் அரையிறுதியாட்டம்.

அதில் ஆர்சனல் மென்செஸ்ட்டர் சிட்டியை இரண்டுக்கு ஒன்று என வென்றது.

61ஆவது நிமடத்தில் சிட்டி முன்னுக்குச் சென்றது.

70ஆவது நிமிடத்தில் ஆர்சனல் சமப்படுத்தியது.

ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

ஆர்சனல் வெற்றி கோலை அடித்தது.

அடித்தவர், அலெக்சிஸ் சாஞ்செஸ்.

ஸ்பானிய, ஜெர்மானிய லீகுகளில் இருந்தபோது உலகின் தலைசிறந்த நிர்வாகி எனச் சிலரால் போற்றப்பட்டவர் சிட்டியின் நிர்வாகி பெப் குவார்டியோலா.

இப்போது இங்கிலாந்துக் காற்பந்தில் சாதாரணமான ஒருவாகத் தென்படுகிறார்.

பெயரிழந்து, களையிழந்து காணப்பட்ட ஆர்சனல் நிர்வாகி ஆர்சீன் வெங்கர், இன்றும் தம்மால் முக்கியத் தருணங்களில் பெரிய அணிகளை வெல்ல முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

ஆர்சனலுக்கும் செல்சிக்கும் இடையிலான இறுதியாட்டம் அடுத்த மாதம் 27ஆம் தேதி நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்