400 மீட்டர் ஓட்டம் : 43 ஆண்டு சாதனையை முறியடித்த வீராங்கனை
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் அங்கத்தில், சிங்கப்பூர் வீராங்கனை திப்னா லிம்-பிரசாத் சாதனை படைத்திருக்கிறார்.
கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் அங்கத்தில், சிங்கப்பூர் வீராங்கனை திப்னா லிம்-பிரசாத் சாதனை படைத்திருக்கிறார்.
1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தென்கிழக்காசியப் போட்டிகளின் 400 மீட்டர் ஓட்டத்தில் சீ சுவீ லீ எடுத்துக்கொண்ட நேரம் 55.08 விநாடிகள். அதற்காக அவருக்கு வெண்கலப்பதக்கம் கொடுக்கப்பட்டது.
43 ஆண்டுகளாய் சாதனையாக இருந்த அந்த நேரத்தைவிடக் குறைவாக எடுத்துக்கொண்டார் திப்னா. போட்டியை அவர் 54.18 விநாடிகளில் முடித்துக்கொண்டார்.