Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்குச் சிறந்த விளையாட்டாளருக்கான UEFA விருது

பருவத்தின் சிறந்த விளையாட்டாளருக்கான UEFA விருது, காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பருவத்தின் சிறந்த விளையாட்டாளருக்கான UEFA விருது, காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
லா லீகா (La Liga), வெற்றியாளர் கிண்ணம் ( Champions League) ஆகிய போட்டிகளில், 'ரியல் மட்ரீட்' என்ற தமது குழு, முன்னணியில் இடம்பெறச் செய்ய துணைபுரிந்ததற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது.
மூன்றாவது முறையாக அந்த விருதைப் பெறும் ரொனால்டோ, தாம் மேலும் ஊக்கம் அடைவதாகக் கூறினார். 'ரியல் மட்ரீட்' குழுவில் இருப்பது தமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக அவர் சொன்னார்.
ரொனால்டோவுக்குப் போட்டியாக இருக்கும் விளையாட்டாளர் லயனல் மெஸ்ஸி, அந்த விருதை இரண்டு முறை பெற்றிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்