Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து: ஓர் அலசல்

இந்த வாரம் ஆர்சனல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மோதவிருக்கின்றன. 

வாசிப்புநேரம் -

இந்த வாரம் ஆர்சனல், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் மோதவிருக்கின்றன. 

அது உட்பட சில ஆட்டங்களை இப்போது அலசுவோம்.

சிங்கப்பூர் நேரப்படி நாளை மறுதினம் இரவு 7 மணிக்கு லீக் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ள மென்செஸ்ட்டர் யுனைட்டட், சுவான்சீ சிட்டியைச் சந்திக்கிறது.

பட்டியலின் முதல் 4 இடங்களுக்கு முன்னேற யுனைட்டட் ஆட்டத்தை வெல்வது அவசியம்.

அன்றிரவு சுமார் 9 மணிக்கு மிடில்ஸ்பரோவும் பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள மென்செஸ்ட்டர் சிட்டியும் பொருதுகின்றன.

அதே நேரத்தில் எவர்ட்டனும் பட்டியலில் முதலிடத்தை வகிக்கும் செல்சியும் மோதுகின்றன.

இனி வரும் ஆட்டங்கள் ஒவ்வொன்றையும் செல்சி வென்றால் லீக் கிண்ணம் அதற்குத்தான் என்ற நிலை உருவாகும்.

அதே வேளையில் சற்று சரிந்தாலும் கிண்ணம் இரண்டாம் இடத்தில் உள்ள டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பருக்குச் செல்லக்கூடும் என்ற உணர்வு வளரும்.

பதினொன்றரை மணிக்குப் பரம வைரிகளான ஸ்பர்ஸும் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ள ஆர்சனலும் சந்திக்கின்றன.

பொதுவாக விறுவிறுப்பாக இருக்கும் ஆட்டம் இது.

இரு அணிகளும் வெல்லவேண்டிய சூழ்நிலை.

அணிகளின் ரசிகர்கள், நடுநிலை ஆதரவாளர்கள், இரு தரப்பினருக்கும் ஆட்டம் சுவாரசியமான ஒன்றாக அமையலாம்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு வார்ட்பஃர்டும் லிவர்ப்பூலும் மோதுகின்றன.

பட்டியலில் முதல் 4 இடங்களுக்குக் கீழ் முடியும் அபாயத்தில் உள்ளது லிவர்ப்பூல்.

அணி, எஞ்சியுள்ள லீக் ஆட்டங்கள் அனைத்தையும் வெல்வது நல்லது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்