Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

இங்கிலீஷ் பிரிமியர் லீக் காற்பந்து: ஒரு கண்ணோட்டம்

இந்த வாரம் நடைபெற்ற ஆட்டங்களில், ஆர்சனல் சரிந்தது.

வாசிப்புநேரம் -

இந்த வாரம் நடைபெற்ற ஆட்டங்களில், ஆர்சனல் சரிந்தது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட், மென்செஸ்ட்டர் சிட்டி இரண்டும் தடுமாறின. 

செல்சி, டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், லிவர்ப்பூல் மூன்றும் வெற்றி கண்டன.

சிங்கப்பூர் நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்ப்பூல், வார்ட்ஃபர்டை, ஒன்றுக்குப் பூஜ்யம் எனும் கோல் கணக்கில் வென்றது.

லீக் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது லிவர்ப்பூல்.

மென்செஸ்ட்டர் யுனைட்டட், மென்செஸ்ட்டர் சிட்டி இரண்டும் இந்த வாரம் அவற்றின் ஆட்டங்களை வெல்லவில்லை.

அதனால் லிவர்ப்பூல் பட்டியலின் முதல் 4 இடங்களுக்குள் முடிக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

நேற்று முன்தினம் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், ஆர்சனலை இரண்டுக்குப் பூஜ்யம் எனும் கோல் எண்ணிக்கையில் வென்றது.

லீக் கிண்ணத்தை வெல்வதற்கான போட்டியை ஸ்பர்ஸ் விட்டுக்கொடுப்பதாக இல்லை.

பட்டியலில் இரண்டாம் இடத்தில் முடிப்பதே ஸ்பர்ஸுக்குப் பெருமை தரும் ஒன்று.

ஆர்சனல், தொடர்ந்து ஆறாம் இடத்தில் உள்ளது.

மற்றோர் ஆட்டத்தில் செல்சி, எவர்ட்டனை மூன்றுக்குப் பூஜ்யம் என வென்றது.

லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற வீம்புடன் ஆடிவருகிறது செல்சி.

செல்சி, ஸ்பர்ஸ் இரண்டும் இனி தடுமாறாமல் இருத்தல் அவசியம்.

மென்செஸ்ட்டர் சிட்டி, எதிர்பாராவிதமாக மிடில்ஸ்பரோவுடன் இரண்டுக்கு இரண்டு எனும் கோல் கணக்கில் சமநிலை கண்டது.

மென்செஸ்ட்டர் யுனைட்டட், சுவான்சீ சிட்டியுடன் ஒன்றுக்கு ஒன்று என சமநிலை கண்டது.

இரு மென்செஸ்ட்டர் அணிகளும் இந்தப் பருவம் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யவில்லை.

இரண்டில் ஒரு அணி மட்டுமே பட்டியலின் முதல் 4 இடங்களுக்குள் முடிக்கும் என்ற உணர்வு வளர்ந்துவருகிறது.

மென்செஸ்ட்டர் சிட்டி நான்காம் இடத்தில், யுனைட்டட் ஐந்தாம் இடத்தில். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்