Images
  • Sports
    படம்: Justin Ong

தென்கிழக்காசியப் போட்டிகள் - விரைவுச் சறுக்குப் போட்டியில் சிங்கப்பூருக்கு 4 வெள்ளிப் பதக்கங்கள்

கோலாலம்பூரில் நடைபெறும் தென்கிழக்காசியப் போட்டிகளில் சிங்கப்பூரின் விரைவுச் சறுக்கு விளையாட்டாளர்கள் 4 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

பெண்களுக்கான 1000 மீட்டர் விரைவுச் சறுக்குப் பிரிவில் சேயென் கோ சிங்கப்பூரின் முதல் விரைவுச் சறுக்குப் பதக்கத்தை வென்றார். அவர் 1:48.907 என்ற நேரத்தில் 1000 மீட்டரைக் கடந்தார்.

இந்நிலையில் ஆண்கள் பிரிவில், லூக்கஸ் இங் 1:55.185 என்ற நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டி சென்றார்.

பெண்களுக்கான 3000 மீட்டர் அஞ்சல் பிரிவில், சிங்கப்பூர்க் குழுவினர் 5:18.122 என்ற நேரத்தில் முடித்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றனர்.

ஆண்களுக்கான 3000 மீட்டர் அஞ்சல் பிரிவிலும், சிங்கப்பூர்க் குழுவினர் 4:37.113 என்ற நேரத்தில் வந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றனர்.  

உங்கள் கருத்து

Top