Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கனவுகளுடன் இளையர்கள் உருவாக்கிய ரொஹிஞ்சா காற்பந்துக் குழு

ரொஹிஞ்சா அகதிகள்  சிலர், உள்ளத்தில் பெரிய கனவுகளைச் சுமந்துவருகிறார்கள்.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர்:  ரொஹிஞ்சா அகதிகள்  சிலர், உள்ளத்தில் பெரிய கனவுகளைச் சுமந்துவருகிறார்கள்.

மலேசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள ரொஹிஞ்சா இளையர்கள் சிலர், 2015 ஆம் ஆண்டில் காற்பந்துக் குழு ஒன்றை நிறுவினர்.

குழுவை நிறுவியவர்களில் ஒருவரான ரொஹிஞ்சா அகதி 22 வயது ஃபருக், காற்பந்துத் திடலில் தமது கனவுகளைத் துரத்திச் செல்கிறார்.

மியன்மாரின் வடமேற்குப் பகுதியிலுள்ள ரக்கைனைவிட்டு ஃபருக்கும் காற்பந்து விளையாடும் அவரது நண்பர்கள் சிலரும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியேறி மலேசியாவிற்குச் சென்றனர்.

எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாத ரொஹிஞ்சா அகதிகளுக்கு மலேசியாவில் வேலை செய்யும் உரிமை இல்லை.
மருத்துவ, கல்வி வசதிகள் ஆகியவையும் அவர்களுக்கு இல்லை.

அனைத்துலக அரங்கில் தமது காற்பந்துக் குழு விளையாடி, ரொஹிஞ்ச மக்களுக்கும் திறமை உண்டு என்பதை எடுத்துக்காட்ட லட்சியம் கொண்டுள்ளார் ஃபருக்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்