Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நீச்சல் போட்டியில் முதன்முறையாக அடியெடுத்து வைக்கும் சிங்கப்பூரர்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நீச்சல் போட்டிகளில் முதன்முறை அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

இந்த ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நீச்சல் போட்டிகளில் முதன்முறை அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

16 வயது சிங்கப்பூரர் இராஸ்முஸ் ஆங்.

இந்தப் பெருமை அவருக்குக் கிடைக்க தொழில்நுட்பம் பெரும் உதவியாக அமைந்தது. 

இந்த ஆண்டு தொடக்கத்தில், இராஸ்முஸ் ஆங் ஒரு தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டுக் கொண்டிருந்தார்.

இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கெடுப்பது அவருக்கு எட்டாக் கனியாகவே இருந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற நீச்சல் தகுதிச் சுற்றுச் சோதனைகளுக்குச் சென்ற இராஸ்முஸ் ஆங் கோலாலம்பூரில் நடைபெறும் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.

தமது பயிற்றுவிப்பாளருக்கு நன்றி கூறுகிறார், இராஸ்முஸ் .

இவான் யீ போன்றோரும் இராஸ்முஸின் முன்னேற்றத்துக்குப் பெரும் உதவியாக உள்ளனர்.

பல்வேறு தொழில்நுட்பத் வகைகளைப் பயன்படுத்தி நீச்சல் வீரர்களின் அசைவுகளை ஆய்வு செய்து வருகிறார் இவான். 

பயிற்றுவிப்பாளர்களுடன் சேர்ந்து நீச்சல் வீரர்களுக்குச் செயல்திறன் திட்டங்களையும் அவர் திட்டமிடுகிறார்.

இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், நீச்சல் வீரர்கள் பயிற்சி செய்யும் போது அல்லது போட்டியிடும் போது, தண்ணீருக்கு அடியில் அவர்களின் அசைவுகளை எளிதில் கண்காணிக்க முடிகிறது. 

அதன் மூலம் வீரர்கள் அவரவரின் தவற்றைத் திருத்திக்கொள்ள முடிகிறது. 

இராஸ்முஸ் தனது தவற்றைச் சரி செய்துக்கொள்ள இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது. 

இப்போது மிகக் குறைவான அசைவுகளுடன் வெகு தூரம் நீந்தக் கற்றுக்கொண்டார் இராஸ்முஸ். 

எதிர்வரும் தென்கிழக்காசியப் போட்டிகளில் வெற்றிப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இவருடைய தற்போதைய இலக்கு.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்