Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

தென் கிழக்காசியப் போட்டிகள்-இதுவரை இல்லாத அளவுக்கு சிங்கபூருக்கு 44 தங்கம்

44ஆவது பதக்கத்தைத் தேசிய நீச்சல் வீராங்கனை குவா ஜிங் வன் கைப்பற்றினார்.

வாசிப்புநேரம் -
தென் கிழக்காசியப் போட்டிகள்-இதுவரை இல்லாத அளவுக்கு சிங்கபூருக்கு 44 தங்கம்

(படம் : ஜஸ்தின் ஒங்)

தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை இல்லாத அளவில் சிங்கப்பூர் 44 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

44ஆவது பதக்கத்தைத் தேசிய நீச்சல் வீராங்கனை குவா ஜிங் வன் (Quah Jing Wen) கைப்பற்றினார்.

100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் அவர் தங்கம் வென்றார்.

போட்டியில் வெண்கலத்தை அவரது மூத்த சகோதரி டிங் வன் (Ting Wen) வென்ற வேளையில், வெள்ளிப் பதக்கம் தாய்லந்துப் போட்டியாளருக்குச் சென்றது.

சிங்கப்பூரின் ஆடவர் கோல்ப்ஃ குழு, தங்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

கோல்ஃப் விளையாட்டாளர்கள் கிரேக்கரி ஃபூ (Gregory Foo), ஜொஷுவா ஹோ (Joshua Ho), மார்க் ஒங் (Marc Ong), ஜொஷுவா ஷொய் (Joshua Shou) ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு, தாய்லந்துக் குழுவை வீழ்த்தியது.

மகளிருக்கான மேசைப் பந்துப் போட்டியில், சிங்கப்பூர் அணி தங்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

தாய்லந்து அணியை மூன்றுக்கு-பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் சிங்கப்பூர் மகளிர் அணி தோற்கடித்தது.

முன்னதாக, 50-மீட்டர் குறிசுடும் போட்டியில், சிங்கப்பூரர் ஜாஸ்மின் சர் தங்கம் வென்றார். அத்துடன் தென் கிழக்காசியப் போட்டிகளில் புதிய சாதனையையும் அவர் படைத்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்