Images
  • மெட்லி
    (400 மீட்டர் அஞ்சல் நீச்சலில் தங்கத்தைக் கைப்பற்றிய களிப்பில் சிங்கப்பூர் அணியினர், படம்: SNOC)

சிங்கப்பூருக்கு மீண்டும் தங்கம்: 400 மீட்டர் பலபாணி அஞ்சல் நீச்சலில்

பெண்களுக்கான நானூறு மீட்டர் பலபாணி அஞ்சல் நீச்சல் போட்டியில், சிங்கப்பூர் அணி தங்கம் வென்றுள்ளது.

குவா டிங் வென் (Quah Ting Wen), சமந்தா இயோ (Samantha Yeo), ஹூங் என் சீ(Hoong En Qi), குவா ஜிங் வென் (Quah Jing Wen) ஆகிய நால்வர் அடங்கிய குழு 4.09 நிமிடத்தில் போட்டியை முடித்து முதல் இடத்தைப் பிடித்தனர்.
இரண்டாம் நிலையில் வந்த குழுவைவிட 2 வினாடி முன்னதாக, அவர்கள் போட்டியை முடித்துத் தங்கத்தைக் கைப்பற்றினர்.

சிங்கப்பூரின் பெண்கள் அணி, இவ்வாண்டு தென் கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெறும் மூன்றாவது தங்கம் அது.

இந்நிலையில்,

உயரம் தாண்டும் போட்டியில், பெண்கள் பிரிவில், சிங்கப்பூரில்
மிஷெல் சுங் (Michelle Sng) தங்கம் வென்றுள்ளார். வெற்றிகரமான மேல்முறையீட்டுக்குப் பின்னர், அவருக்கு அந்த விருது கிடைத்தது. 1965-ஆம் ஆண்டுக்குப் பின்னர், அந்தப் பிரிவில் விருது பெறும் முதல் சிங்கப்பூர் வீராங்கனை அவர்.  

உங்கள் கருத்து

Top