Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

FINA கிராண்ட் ப்ரீ முக்குளிப்புப் போட்டியில் சிங்கப்பூர் இரட்டையருக்கு வெண்கலம்

3 மீட்டர் உந்தித்தள்ளும் பலகைப் பிரிவில் இரட்டைச் சகோதரர்கள் மார்க், திமதி லீ வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

வாசிப்புநேரம் -
FINA கிராண்ட் ப்ரீ முக்குளிப்புப் போட்டியில் சிங்கப்பூர் இரட்டையருக்கு வெண்கலம்

படம்: Singapore Swimming Association

சிங்கப்பூர்: 3 மீட்டர் உந்திக்குதிக்கும் பலகைப் பிரிவில் இரட்டைச் சகோதரர்கள் மார்க், திமதி லீ வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

தேசிய முக்குளிப்பு வீரர்களான இருவரும் ஆண்கள் ஒருங்கிணைந்த 3 மீட்டர் பிரிவில் 366 புள்ளிகள் பெற்றனர். 438.28 புள்ளிகளுடன் தென்கொரிய வீரர்களுக்கு முதலிடம். 396.90 புள்ளிகளுடன் ரஷ்யப் போட்டியாளர்கள் இரண்டாம் இடத்தில் வந்தனர்.

இன்றைய போட்டி மனநிறைவைத் தரும் வகையில் அமைந்ததாக மார்க் தெரிவித்தார். தென்கிழக்காசியப் போட்டிகள் முடிந்து இரண்டு வாரமே இடைவெளி இருந்ததாகவும் பள்ளிக்கிடையில் பயிற்சி செய்வது கடினமாக இருந்ததாகவும் அவர் சொன்னார்.

சொந்த மண்ணில் வெண்கலம் வென்றது மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார் மார்க்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்