Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸுக்கு இன்று திருமணம்

பியோன்ஸே, எவா லொங்கோரியா ( Beyonce, Eva Longoria) போன்ற பிரபல நட்சத்திரங்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்களில் அடங்குவர். 

வாசிப்புநேரம் -
டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸுக்கு இன்று திருமணம்

(படம்:AFP)

டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸும் ரெடிட் (Reddit) நிறுவனத்தின் துணை-நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹெனியனும் (Alexis Ohanian) இன்று நியூ ஆர்லியன்ஸில், (New Orleans) திருமணம் செய்துகொள்கின்றனர்.

புதுமணத் தம்பதியை நேரில் வாழ்த்த சுமார் 250 விருந்தினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

பியோன்ஸே, எவா லொங்கோரியா ( Beyonce, Eva Longoria) போன்ற பிரபல நட்சத்திரங்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்களில் அடங்குவர். 

வில்லியம்ஸ்-ஒஹெனியன் தம்பதிக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் குழந்தை பிறந்தது. 

23-முறை கிராண்ட் ஸ்லாம் விருதை வென்றுள்ள வில்லியம்ஸ், இவ்வாண்டின் ஆஸ்திரேலியப் பொது விருதை வென்றபோது கர்ப்பமாக இருந்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்