Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

விளையாட்டு

மெஸ்ஸி இல்லாத உலகக் கிண்ணமா?

ரசிகர்கள் பலரால் தரிசிக்கப்படும் லயனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா, 48 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறாமல் போகலாம்!

வாசிப்புநேரம் -

ரசிகர்கள் பலரால் தரிசிக்கப்படும் லயனல் மெஸ்ஸியின் அர்ஜெண்டினா, 48 ஆண்டுகளில் முதன்முறையாக உலகக் கிண்ணத்துக்குத் தகுதிபெறாமல் போகலாம்!

லத்தீன் அமெரிக்கக் கண்டப் பட்டியலில் அர்ஜெண்டினா தற்போது ஐந்தாம் இடத்தில். அந்த இடத்தில் முடித்தால் playoff சுற்றுக்குத்தான் போகமுடியும்.

அதுவும் இல்லாமல் ஆறாம் இடத்தில் வந்தால் உலகக் கிண்ணத்திற்குச் செல்லமுடியாது. அர்ஜெண்டினா 6ஆவதாக வருவதற்கும் சாத்தியம் உண்டு. காரணம் தற்போது ஆறாம் இடத்தில் உள்ள சிலிக்கு அர்ஜென்டீனாவைவிட ஒரு புள்ளிதான் குறைவு.

சிங்கப்பூர் நேரப்படி நாளைக் காலை 7.30 மணிக்கு அர்ஜெண்டினா நான்காம் இடத்தில் உள்ள பெருவைச் சந்திக்கிறது. அணி பெருவை வெல்வது சிரமம், ஆனால் அவசியம்.

படம்: AFP

நான்காம் இடத்தில் முடித்தால் பெரு உலகக் கிண்ணத்துக்குச் செல்லும். அணி, 1982க்குப் பிறகு உலகக் கிண்ணத்திற்கு இன்றுவரை தகுதிபெற்றதில்லை. பெருவை அடுத்து அர்ஜெண்டினா வரும் புதன்கிழமை காலை 7.30 மணிக்கு எக்குவடோருடன் மோதும்.

முதலிடத்தில் உள்ள பிரேசில் போட்டிக்குத் தகுதிபெற்றுவிட்டது. அணி முதலிடத்தில் முடிப்பதும் உறுதியாகிவிட்டது.

படம்: Reuters

ஒரு கட்டத்தில் தத்தளித்துக்கொண்டிருந்த பிரேசில் இப்போது அமைதியான முறையில் நன்கு மீண்டு வருவதுபோல் தெரிகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள உருகுவே நாளை அதிகாலை 5 மணிக்கு வெனிசுவேலாவைச் சந்திக்கிறது.

உருகுவே, கொலம்பியா, பெரு, அர்ஜெண்டினா, சிலி, பராகுவே ஆகிய அணிகள் தற்போது பட்டியலில் 2 முதல் 7 வரையிலான இடங்களில் இருக்கின்றன.

அவை அனைத்திற்கும் உலகக் கிண்ணத்திற்குச் செல்ல இன்னமும் வாய்ப்புகள் உள்ளன. லத்தீன் அமெரிக்க அணிகள் நாளை அதிகாலை முதல் வரும் புதன்கிழமை வரை தங்களின் கடைசி இரு தகுதி ஆட்டங்களை ஆடவிருக்கின்றன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்