Images
  • Yen

ஏன் வந்தது? எப்படி வந்தது? – ‘வெளுத்துக்கட்டு’

வெளுத்துக்கட்டு:

ஆள் பாதி ஆடை பாதி என்பது வழக்கு. அழுக்குப் படிந்த ஆடையுடன் ஒருவன் சொல்வது எதுவும் எடுபடாது. எனவே, ஒருவனிடம் நல்ல யோசனை இருக்கும் பட்சத்தில், அவன் முதலில் வெளுத்த (துவைத்த) உடைகளை உடுத்திச் செல்லவேண்டும்; அதாவது உடைகள் தூய்மையாக இருக்கவேண்டும். அப்போதுதான் அவன் சொல்வதை மற்றவர்கள் காது கொடுத்துக் கேட்பார்கள். நல்ல உடையுடன் சென்று சிறப்பாகச் செயல்பட்டு திரும்பி வா என்பதைக் குறிக்கவே, “வெளுத்துக்கட்டு”என்று பெரியவர்கள் கூறுவர்.

எடுத்துக்காட்டு: பேச்சுப் போட்டியில் மாணவர்கள் வெளுத்துக்கட்டினர்.

உங்கள் கருத்து

Top