Images
  • aen

ஏன் வந்தது? எப்படி வந்தது? - 'மக்கு'

கதவு, சன்னல் ஆகியவற்றின் இடுக்கில் இடைவெளி இருந்தால் மக்கு எனும் களிம்பைப் பூசுவார்கள். அது சற்று நேரம் கழித்து இறுகிக்கொள்ளும். அதற்கென்று தனி குணம் கிடையாது. அதை எப்படிப் பயன்படுத்துகிறோமோ அப்படிப் பயன்படும். அதனால் மந்தகுணமாக, சொந்த சிந்தனையைப் பயன்படுத்தாதவர்களை ‘மக்கு’ என்று குறிப்பிடுவது வழக்கமானது. 

எடுத்துக்காட்டு: “மக்காக இருக்கிறாயே! இதைத் தானாகச் செய்யத் தெரியாதா?”
 

உங்கள் கருத்து

Top