Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திருக்குறள் விழா 2017

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. அவை அனைத்துக்கும் தீர்வுகாண்பது நம்மால் இயலாமற் போகக்கூடும். ஆனால், பிரச்சினைகள் பற்றிய நம்முடைய கண்ணோட்டம் மாறும்போது, அவற்றை எதிர்கொள்ளும் நம்பிக்கையை நம்மால் பெறமுடியும்.  அதற்கு திருக்குறள் உதவுகிறது.

வாசிப்புநேரம் -

அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. அவை அனைத்துக்கும் தீர்வுகாண்பது நம்மால் இயலாமற் போகக்கூடும். ஆனால், பிரச்சினைகள் பற்றிய நம்முடைய கண்ணோட்டம் மாறும்போது, அவற்றை எதிர்கொள்ளும் நம்பிக்கையை நம்மால் பெறமுடியும். அதற்கு திருக்குறள் உதவுகிறது.

திருக்குறள் விழா 2017இல் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் அவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் மொழி விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சிகளில் ஒன்றாக திருக்குறள் விழாவை அரங்கேற்றியது தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம். உலகப் பொதுமறையாம் திருக்குறளின் பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்தனர் சிறப்புப் பேச்சாளர்கள்.

திருக்குறள் இனம் கடந்து, மதம் கடந்து, உலகப் பொதுமறை. உலகத்திலுள்ள எல்லா மனிதருக்கும் பொருந்தக்கூடியது. அதனால்தான் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னார்கள். அப்படி எல்லாருக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஒழுக்கத்தை ஒரு நெறியை எப்படி வாழ வேண்டும் என்ற ஒரு முறையைக் கற்றுத்தரக்கூடிய ஒரு அற்புதமான ஒரு நீதிநூல்தான் திருக்குறள். அது எல்லாருக்கும் பொருந்தும். எந்தக் காலத்திற்கும் பொருந்தும். குறிப்பாக இளையர்களுக்கு இப்போது படிப்பதற்கு மிக தேவையான ஏற்ற நூல் என்றால் அது திருக்குறள். அந்தக் கருத்தில் மாறுபடவில்லை மாணவர்கள். திருக்குறள் வாழ்வின் ஒளிவிளக்கு என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை இளவயதிலேயே உணர்ந்த குழந்தைகளையும் நேற்றைய விழாவில் காணமுடிந்தது. திருக்குறள் விழாவையொட்டி, பாலர் வகுப்பு முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறள் தொடர்பான போட்டிகள் நடத்தப்பட்டன.அவற்றுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று நடைபெற்றது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்