Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழர்களின் பாரம்பரிய உணவின் மகத்துவங்கள் பற்றிய நிகழ்ச்சி

இன்றையத் துரித உலகில், பலர் மறந்திருக்கக்கூடிய தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கவேண்டும்;  பலரைப் பாதித்துவரும் பல நோய்கள் வராமல் தடுக்க அவை  உதவக்கூடும்.

வாசிப்புநேரம் -

இன்றையத் துரித உலகில், பலர் மறந்திருக்கக்கூடிய தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கவேண்டும்; பலரைப் பாதித்துவரும் பல நோய்கள் வராமல் தடுக்க அவை உதவக்கூடும். தமிழ்மொழி விழாவையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சி அந்தக் கருத்தை வலியுறுத்தியது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகளின் நன்மைகள் பற்றி அதில் எடுத்துச்சொல்லப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய உணவுவகைகள் மிகச் சிறப்பாக அலசப்பட்டன. குறிப்பாகக் கொள்ளு, எள், மஞ்சள், சிறுதானியங்கள் ஆகியவற்றைப் பற்றி மிகச் சிறப்பாகப் பேசப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிவராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்