Images

எனக்கு ஒரு கதை வரை- படங்கள் வழி வார்த்தைகளைக் கற்றல்

ஒரு மொழியை நன்கு புரிந்துகொள்ள உதவுவது வார்த்தைகளே.

அந்த வார்த்தைகளைக் கற்றுக்கொள்ள பல வழிகள் உள்ளன.

அவற்றில் ஒன்று படங்கள் வழி வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது.

படங்கள் வழி வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் 'எனக்கு ஒரு கதை வரை' என்ற தலைப்பில் பயிலரங்கு ஒன்று இன்று காலையில் நடைபெற்றது.

பயிலரங்கு இந்திய மரபுடைமை நிலையத்தில் நடந்தது.
அதில், நான்கு வயது முதல் ஒன்பது வயது வரையிலான மாணவர்கள் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றம் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதைப் போல, கருத்துக்களையும் கடினமான வரிகளையும் படங்கள் மூலமாகப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கலாம் என ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர்.


உங்கள் கருத்து

Top