Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ் பாரம்பரிய இசையை ரசித்துச் சுவைக்க வாய்ப்பளித்த நிகழ்ச்சி

கர்நாடக சங்கீதத்தைச் சாதாரண மக்களும் ரசிக்கும் வண்ணம் வழங்குவது, சவால் எனச் சொல்லப்படுவதுண்டு.

வாசிப்புநேரம் -

கர்நாடக சங்கீதத்தைச் சாதாரண மக்களும் ரசிக்கும் வண்ணம் வழங்குவது, சவால் எனச் சொல்லப்படுவதுண்டு.

அதை முறியடித்து, எளிமையாகப் படைத்தது மட்டுமின்றி, கர்நாடக சங்கீதம் வாயிலாகத், தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துச் சொல்ல முற்பட்டது, ஒரு மாறுபட்ட 'தமிழ் இசை' நிகழ்ச்சி.

இந்தியர் சங்கத்தில் நடைபெற்றது 'தமிழ் இசை' நிகழ்ச்சி.

அதில், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரபல தமிழ்க் கவிஞர்கள் முதல் 20ஆம் நூற்றாண்டில் இருந்தவர்கள் வரை...

அனைவரின் காலத்தால் அழியாத படைப்புகள் பாரம்பரிய கர்நாடக இசைப் படைப்புகளாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறுவர்கள், பெரியவர்கள் ஒன்றாக பாடல்களைப் படைத்தனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்குக் கூடுதல் எழில் சேர்க்கின்றன மகாகவி பாரதியாரின் படைப்புகள்.

நிகழ்ச்சி, கர்நாடக இசையை வேறு பரிமாணத்தில் வெளிப்படுத்தியதாகப் பார்வையாளர்கள் கருத்துரைத்தனர்.

தமிழ்மொழி விழாவையொட்டி நடைபெற்றது நிகழ்ச்சி.

அதில் கலந்துகொண்டதில் ஏற்பாட்டாளர்களுக்குத் திருப்தி.

மாறிக்கொண்டே வரும் நவீனக் காலத்தில், பாரம்பரியக் கர்நாடக இசைக்கு என்றும் இடமுண்டு என்பதை நினைவூட்டியது 'தமிழ் இசை' நிகழ்ச்சி.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்