Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

களைகட்டிய 'தமிழும் கலையும்' நிகழ்ச்சி

ஆர்வமிருந்தால் தமிழ்மொழியைக் கட்டிக்காப்பது கடினமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் கூறியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -

ஆர்வமிருந்தால் தமிழ்மொழியைக் கட்டிக்காப்பது கடினமல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் கூறியிருக்கிறார்.

தற்போது நடைபெற்றுவரும் தமிழ்மொழி விழாவில் மாணவர்களும் இளையர்களும் பெரிதளவில் பங்களித்து வருவதை அவர் குறிப்பிட்டார்.

தமிழும் கலையும் 2017 இயல் இசை நாடகம் என்ற நிகழ்ச்சியில் திரு. விக்ரம் பேசினார்.

தமிழ்மொழி விழாவை முன்னிட்டுத் 'தமிழும் கலையும்' என்ற நிகழ்ச்சி மூன்றாவது முறையாக இடம்பெற்றது.

சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் அதற்கு ஏற்பாடு செய்தது.

இவ்வாண்டு இயல், இசை நாடகம் என முத்தமிழும் ஒரே மேடையில் சங்கமித்தது.

மொழியோடு தமிழ்க் கலையின் அருமையையும் இளையர்களுக்கு எடுத்துக்கூறுவது நிகழ்ச்சியின் நோக்கம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விக்ரம் நாயர் மொழி வளர்ச்சியில் இளையர்களின் பங்கை வலியுறுத்தினார்.

கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பாடல்கள் என உள்ளூர்க் கலைஞர்களின் படைப்புகள் களைகட்டின.

நகைச்சுவைக் குறுநாடகம் ஒன்றும் நேற்று அரங்கேறியது.

நிகழ்ச்சிக்குப் பிரபல திரைப்படக் கலைஞரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமான திரு. நாசர் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

பொருளீட்டுவதில் வேகம் காட்டும் அதேவேளையில் சிங்கப்பூரில் மொழி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர் பாராட்டினார்.

சிங்கப்பூரில் பல்லாண்டு காலமாக கலைத்துறைக்குப் பெரும் பங்களித்த மூத்த கலைஞர் திரு. ஆரூர் சபாபதிக்கு நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்