Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தமிழ் மொழி விழா பற்றி சமூக ஊடகத்தில் பகிரும் எழுத்தாளர்

ஒரு மொழியை நீடித்து நிலைக்கவைப்பதில் வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கியப் பங்குண்டு.

வாசிப்புநேரம் -

ஒரு மொழியை நீடித்து நிலைக்கவைப்பதில் வாசிப்புப் பழக்கத்துக்கு முக்கியப் பங்குண்டு.

தமிழில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க சமூக ஊடகம் வழி ஒரு முயற்சி.

'வாசிப்பில் ஈர்த்த வரிகள்' என்ற ஊடகப் பதிவுகளின் வழி பிறரைப் புத்தகப் பக்கங்களைப் புரட்ட வைக்க முனைகிறார் எழுத்தாளர் நெப்போலியன்.

அவரைச் சந்தித்து வந்தது செய்தி.

தேசிய அளவில் தமிழ் மொழி விழாவுக்காக இம்மாதம் பற்பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளன.

ஆனால் ஒரு தனிநபர் என்ற முறையில் இந்த முயற்சியை எடுத்ததற்கான காரணத்தை விளக்கினார் திரு. நெப்போலியன்.

சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்படும் தகவல்கள் சரியானவையாக இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்காகக் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. 

தமிழ்மொழியை நீடித்து நிலைக்கவைக்க, மற்ற மொழிகளின் பலங்களையும் புரிந்துகொள்ளவேண்டும் என்கிறார் எழுத்தாளர்.

தமது பதிவுகளைப் புதிய பரிமாணங்களில் வழங்கத் திட்டமுள்ளதாகச் சொன்னார் திரு. நெப்போலியன்.

அடுத்தடுத்த ஆண்டுகளின் தமிழ்மொழி விழாவிலும் தமது முயற்சி தொடரும் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்