Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"700 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்" நாடகம்

மேடை நாடகங்களைப் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்ப்பது வழக்கம்.

வாசிப்புநேரம் -

மேடை நாடகங்களைப் பொழுதுபோக்கு அம்சமாகப் பார்ப்பது வழக்கம்.

மாணவர்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

நாடகங்களைக் கண்டு ரசிக்கும் அதே நேரம், நல்ல பல கருத்துக்களை அவர்கள் மனத்தில் பதியச்செய்வது எப்படி? 

அவர்களையும் நாடகக் காட்சிகளில் ஓர் அங்கமாக இணைத்துக்கொள்ளலாம். 

அது ஒரு சிறந்த வழி என்கிறது '700 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்' எனும் நாடகம்.

இவ்வாண்டு தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக மேடையேறுகிறது '700 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்' நாடகம். 

AKT நிறுவனத்தின் முயற்சி இது. 

இத்தகைய அரங்கம் மாணவர்களுடன் கலந்துறவாடுவதற்கு நல்லதொரு தளம் என்பது அதன் நம்பிக்கை.

நாடகத்தில் பண்பட்ட நடிகர்களோடு சில புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். 

சிலருக்குப் பல முறை மேடையேறிய அனுபவம் உண்டு. 

இருந்தாலும் இது புதிய அனுபவமாக அவர்களுக்கு அமைந்தது. 

'700 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர்' நாடகத்தை நாளை பிற்பகல் ஒன்றரை மணிக்கும் மூன்றரை மணிக்கும் மலாய் மரபுடைமை நிலையத்தில் கண்டுகளிக்கலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்