Images
  • 23Mar Final preps tamilodu Vilayaadu (2)
    ப்ரின்ஸஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளி மாணவர்கள்

தமிழோடு விளையாடு சொல்வதெழுதுதல் போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றுக்காகப் பள்ளிகள் ஆயத்தம்

மீடியாகார்ப் நிறுவனத்தின் தமிழ்ச் செய்திப் பிரிவு, முதன்முறையாக ஏற்பாடு செய்துள்ள "தமிழோடு விளையாடு' சொல்வதெழுதுதல் போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள 4 பள்ளிகளும் மும்முரமாகத் தயாராகிவருகின்றன.

இறுதிச் சுற்று, உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 

கேஷுவரினா தொடக்கப்பள்ளி, சோங்ஹுவா தொடக்கப்பள்ளி, ப்ரின்ஸஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளி, ஸீடார் தொடக்கப்பள்ளி ஆகியவை அதில் மோதுகின்றன. 




(சோங்ஹுவா தொடக்கப்பள்ளி மாணவர்கள்)

போட்டியாளர்கள் தங்களை எப்படி தயார்ப்படுத்திக்கொள்கின்றனர் என்பதைக் கண்டறிந்து வந்தது செய்தி. 

வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச்செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் காத்திருக்கும் மாணவர்களுடனான சிறப்பு நேர்காணலை இன்றிரவு 8.30 மணி செய்தியில் காணலாம்.
 

உங்கள் கருத்து

Top