Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சமூக அவலங்கள் குறித்துப் புகார் அளிக்க புதிய வழி

சமூக அக்கறை கொண்ட ஆடைத் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள், கைபேசியை ஆக்ககரமாகப் பயன்படுத்த வழிபிறந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சமூக அவலங்கள் குறித்துப் புகார் அளிக்க புதிய வழி

(படம்: Reuters)

தொழில்நுட்பம் வரமா சாபமா என்ற விவாதங்கள் தொடர்கின்றன; ஆனால் அது நம் கையில்தான் உள்ளது. அதற்கு இந்தப் புதிய முயற்சி ஓர் உதாரணம்.

சமூக அக்கறை கொண்ட ஆடைத் தயாரிப்பு நிறுவன ஊழியர்கள், கைபேசியை ஆக்ககரமாகப் பயன்படுத்த வழிபிறந்துள்ளது.

குழந்தைத் தொழிலாளிகள் விவகாரம், சம்பளம் அளிப்பதில் சுணக்கம், ஆட்கடத்தல் போன்றவை குறித்துப் புகாரளிக்க, தங்கள் கைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர் அவர்கள்.

அதற்கு வகை செய்துள்ளன, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இரு தொலைத் தொடர்புச் சேவைகள்.

தங்களைச் சுற்றி நடக்கும் சமூக அவலங்கள் குறித்து எந்நேரத்திலும் புகார் அளிக்க அவை ஊக்குவிக்கின்றன.

Laborlink, LaborVoices எனும் அந்தச் சேவைகளை அழைத்து, “ஆம் என்பதற்கு 1ஐ அழுத்தவும், இல்லை என்பதற்கு 2ஐ அழுத்தவும்”, போன்ற எளிதான வழிமுறைகளை ஊழியர்கள் பின்பற்றிப் புகார்களைப் பதிவு செய்யலாம்.

“நீங்கள் நியாயமாக நடத்தப்படுகிறீர்களா? சம்பளம் உரிய நேரத்தில் வருகிறதா? அவசரகாலப் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளதா?குழந்தைத் தொழிலாளி யாரையும் பார்த்தீர்களா?” – இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன.

பிரச்சினைகளைக் கண்டும்காணாமல் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்துள்ளது புதிய சேவை என்கின்றன, மனித உரிமை அமைப்புகள்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்