Images
  • 0709 malaysia rakhine
    (படம் : AFP/K.M. ASAD)

அவதியுறும் ரொஹிஞ்சாக்களின் தேவைகளை ஆராயவிருக்கும் மலேசியா

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்திலிருந்து பிற பகுதிகளுக்கு அடைக்கலம் நாடிச் செல்லும் அகதிகளின் மனிதநேய, தளவாடத் தேவைகளை மலேசியா ஆராயவிருக்கிறது.

பங்களாதேஷ், ரக்கைன் போன்றவற்றில் அவதியுறும் அகதிகளின் தேவைகளை ஆராயும் பொறுப்பு மலேசிய ராணுவத்தின் தலைவர் ராஜா முஹம்மது அஃப்பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

மலேசியத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுதீன் ஹுசேன் அதனை அறிவித்தார்.

ரக்கைனில் நிலவும் மனிதநேய சர்ச்சைகளை மலேசியா தொடர்ந்து கண்காணித்துவருகிறது என்று அவர் சொன்னார். 

இடமில்லாமல் தவிப்போர் பயங்கரவாதக் குழுக்களை நாடலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் திரு ஹிஷாமுதீன் கூறினார். 

அதிகரித்துவரும் மனிதநேய சர்ச்சையில் மியன்மாருக்கு மலேசிய ஆயுதப் படை கைகொடுப்பதில் அதிகப் பங்காற்றலாம் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இதுவரை மலேசியா மனிதநேய அடிப்படைகளுக்குத் தேவையான பொருட்கள் கொண்ட 8 கப்பல்களை ரக்கைனுக்கு அனுப்பியுள்ளது.

100,000த்துக்கும் அதிகமான ரொஹிஞ்சாக்கள் ஒழுங்கான இடமில்லாமலும் உணவில்லாமலும் தவிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

உங்கள் கருத்து

Top