Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கரிபியன் தீவுகளைத் தாக்கிய இர்மா சூறாவளி - 6 பேர் பலி

அமெரிக்காவைப் பதம்பார்க்க விரையும் இர்மா சூறாவளி, கரிபியன் தீவுகளைத் தரைமட்டமாக்கிய வேளையில் குறைந்தது 6 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
கரிபியன் தீவுகளைத் தாக்கிய இர்மா சூறாவளி - 6 பேர் பலி

(படங்கள்: AFP)

அமெரிக்காவைப் பதம்பார்க்க விரையும் இர்மா சூறாவளி, கரிபியன் தீவுகளைத் தரைமட்டமாக்கிய வேளையில் குறைந்தது 6 பேர் மாண்டனர்.

ஃபுளோரிடா, ஜார்ஜியா மாநிலக் கரையோரங்களிலிருந்து சுமார் ஒரு மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில், கடந்த 10ஆண்டில் ஆக அதிக எண்ணிக்கையில் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் அது.

ஃபுளோரிடாவில் வசிக்கும் குடும்பங்கள் சூறாவளியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல், சரியாகத் திட்டமிடவேண்டும் என்று மாநில ஆளுநர் ரிக் ஸ்காட்  (Rick Scott) கேட்டுக்கொண்டார்.

அரிய 5ஆம் நிலைச் சூறாவளியான இர்மாவினால் பலத்த காற்றும், கனமழையும் ஏற்பட்டுள்ளன.

செய்ண்ட் மார்டின் தீவில் 60 விழுக்காட்டுக்கும் மேலான வீடுகள் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.

சுமார் 33 மணிநேரமாகத் தொடர்ந்து 300 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகத் தகவல்கள் கூறின.

1970ஆம் ஆண்டு செயற்கைத் துணைக்கோளக் கண்காணிப்பு தொடங்கியதிலிருந்து, நீண்டநேரம் தாக்கிய சூறாவளி இர்மா என்று கூறப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்