Images
  • rats
    படம்: REUTERS/Stringer

உடல் குறையுடைய சிறுமியைத் தாக்கிய எலிக் கூட்டம்

14வயது பிரஞ்சு சிறுமியை எலிக் கூட்டம் ஒன்று தாக்கியதைத் தொடர்ந்து அவர் கவலைகிடமான நிலைமையில் இருக்கிறார்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி தான் வசித்த வாடகை வீட்டின் தரையில் படுத்து கிடந்தார். தூங்கிக்கொண்டிருந்த அவரைச் சூழந்து தாக்கியது எலிக் கூட்டம்.

சிறுமியை ரத்த வெள்ளத்தில் கண்டுபிடித்தாகக் கூறினார் அவரது தந்தை. முகத்தில் 45 காயங்களுடனும், கை கால்களில் 180 காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார் அச்சிறுமி.

வீட்டின் வெளியில் உள்ள குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்ததாக கூறும் சிறுமியின் தந்தை வீட்டின் உரிமையாளர் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

எலிகள் கடித்ததில் சிறுமியின் விரல் நுனிகளை மருத்துவர்களால் சரி செய்யமுடியவில்லை.

தற்போது குடும்பம் வேறு வீட்டிற்குக் குடிபுகுந்துள்ளது. எலிகள் மனிதர்களைத் தாக்குவது அரிது. ஆனாலும் சில நேரங்களில் அவை சடலங்களைத் தின்னுவதுண்டு.

உங்கள் கருத்து

Top