Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜக்கர்த்தாவில் புகைப்பதைக் கைவிட ஊக்குவிக்கும் கிராமம்

50 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தில் அனைவரின் வீடுகளிலும் ஒட்டுவில்லைகள் இருக்க் அவேண்டும் என்பது அங்குள்ளோரின் ஆசை.

வாசிப்புநேரம் -

ஜக்கர்த்தா:  ஆக அதிக எண்ணிகையிலான புகைப் பழக்கம் கொண்டவர்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்று இந்தோனேசியா.

அதனைக் குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஜக்கார்த்தாவின் கிழக்கில் அமைந்துள்ள பெனாஸ் கிராமம் புகைத்தலற்ற இடமாக மாறியுள்ளது.
பலரின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தை அது ஏற்படுத்தியுள்ளது.
9 வயதிலிருந்து புகைப் பழக்கம் இருப்பதாகச் சொன்னார் ஜோக்கோ சுண்டோக்கோ.
ஒரு நாளைக்கு ஐந்து பேக்கெட் சிகரெட்டுகளை அவர் புகைத்துள்ளார். 
இப்போது அந்தப் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டுள்ளதாகப் பெருமையாகச் சொன்னார் ஜோக்கோ.

புகைத்தலற்ற பகுதியாக மாறும் இயக்கம்  அதற்குப் பெரிதும் கைகொடுத்ததாகக் கூறினார் ஜோக்கோ.

உடல்நலமும் வாழ்க்கை முறையும் மேம்பட்டிருப்பதைத் தம்மால் உணர முடிகிறது என்று அவர் மகிழ்ந்தார்.

சிப்பினாங் ஆற்றுக்கு அருகே அமைந்துள்ள பெனாஸ் கிராமம் தூய்மைக்கும் அழகிய சூழலுக்கும் பெயர்பெற்றது.

புகைப்பழக்கத்தைக் கைவிடுவது சுலபமான காரியமல்ல.
அதற்காகக் கிராமவாசிகள் சற்றுக் காலம் எடுத்துக்கொண்டதாகக் கூறினர்.
குடும்பத்தில் முற்றிலும் புகைப்பழக்கம் இல்லாத வீடுகளுக்கு ஒட்டுவில்லைகள் கொடுக்கப்பட்டன.

50 குடும்பங்கள் வசிக்கும் அந்தக் கிராமத்தில் அனைவரின் வீடுகளிலும் ஒட்டுவில்லைகள் இருக்க வேண்டும் என்பது அங்குள்ளோரின் ஆசை.

புகைத்தலைக் கைவிடுவதற்காக முயற்சி எடுத்துவருவோருக்கு உதவும் விதமாக அந்தப் பழக்கத்திலிருந்து மீண்டுவந்தோர் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்