Images
  • 100917 kj
    (படம் : Reuters)

வடகொரியாவில் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கான மாபெரும் பாராட்டு விழா

வடகொரியாவில் ஒரு வாரத்துக்கு முன்னர் நடத்தப்பட்ட அணுவெடிச் சோதனையை வழிநடத்திய விஞ்ஞானிகளையும் தொழில்நுட்ப ஊழியர்களையும் பாராட்டுவதற்காக மாபெரும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னின் தலைமையில் அது நடந்தது.
வட கொரிய தோற்றுவிக்கப்பட்டு 69 ஆண்டுகள் ஆகும் வேளையில் மேலும் ஒரு ஏவுகணைச் சோதனை நடக்கலாம் என்று அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கவலை தெரிவித்திருந்தன.

எனினும் கொண்டாட்டங்கள் மட்டுமே இதுவரை வடகொரியாவில் இடம்பெற்றுவருகின்றன.


ராணுவ உயர் அதிகாரிகளுக்கும் கட்சி அதிகாரிகளுக்கும் தலைவர் கிம் விருந்தளித்தார்.

கலை நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன.

வடகொரியத் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிட்டியது.

உங்கள் கருத்து

Top