Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

அமெரிக்க இளையர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முன்னாள் அதிபர் ஒபாமா

பாட நேரத்தின்போது வகுப்புக்குள் நுழைந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் அதிர்ந்துபோயினர் அமெரிக்க இளையர்கள் சிலர்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க இளையர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த முன்னாள் அதிபர் ஒபாமா

(படம்: பராக் ஒபாமா டுவிட்டர்)

அமெரிக்கா: பாட நேரத்தின்போது வகுப்புக்குள் நுழைந்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் அதிர்ந்துபோயினர் அமெரிக்க இளையர்கள் சிலர்.

வாஷிங்டனில் உள்ள மெக்கின்லே தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளியில் அந்தச் சம்பவம் நடந்தது.
விடுமுறைக்குப் பிறகு முதல் நாள் பள்ளி திரும்பிய மாணவர்களைச் சந்தித்தார் திரு ஒபாமா.
அவர்களுடன் அமர்ந்து உற்சாகமான கலந்துரையாடலில் முன்னாள் அதிபர் ஈடுபட்டார்.

அதிபராக இருந்த காலகட்டத்தில் தாம் நிறைய இளையர்களைச் சந்தித்ததை அவர் நினைவுகூர்ந்தார்.


இம்முறை தாம் சந்தித்த மாணவர்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகத் திரு ஒபாமா தமது டுவிட்டரில் படங்களோடும் காணொளியோடும் பதிவு செய்துள்ளார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்