Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிரியாவின் வெற்றுக் கடவுச்சீட்டுகள் பயங்கரவாத அமைப்பின் வசம்

சிரியாவின் மத்திய காவல்துறையினர் மற்றும் உள்துறை அமைச்சிடமிருந்து பெறப்பட்ட இரகசிய ஆவணங்களின் மூலம் அந்த விவரங்கள் உறுதிசெய்யப்பட்டதாக, அது குறிப்பிட்டது.

வாசிப்புநேரம் -

சிரியாவின் 11,000 வெற்று-கடவுச்சீட்டுகள், ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பிடம் இருக்கக்கூடும் என்று ஜெர்மானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தகைய வெறுமையான அடையாள ஆவணங்களில், எந்தவொரு நபரின் விவரங்களையும் உள்ளடக்க முடியும் என்று ஜெர்மானிய நாளேடு ஒன்று கூறியது.

சிரியாவின் மத்திய காவல்துறையினர் மற்றும் உள்துறை அமைச்சிடமிருந்து பெறப்பட்ட இரகசிய ஆவணங்களின் மூலம் அந்த விவரங்கள் உறுதிசெய்யப்பட்டதாக, அது குறிப்பிட்டது.

அத்தகைய வெற்று கடவுச்சீட்டுகள், பயங்கரவாதிகளுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்றும் நாளேடு குறிப்பிட்டது.

சிரியா அரசாங்கத்தின் இணையத் தளங்களிலிருந்து அந்த அடையாள ஆவணங்கள் களவாடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுவதாகவும் அது குறிப்பிட்டது.

2015 நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பாரிஸ் தாக்குதலின் பின்னணியில், சிரியாவின் அத்தகைய போலி கடவுச்சீட்டுகள் இருந்ததாகவும், அந்தத் தகவல் காவல்துறை விசாரணைகளில் உறுதிசெய்யப்பட்டதாகவும் ஜெர்மானிய நாளேடு குறிப்பிட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்