Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 16 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலவும் சோகம்

அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதலின் துயரம் 16 ஆண்டுகளுக்குப் பிறகும் உணரப்படுகிறது

வாசிப்புநேரம் -
அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதல் - 16 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலவும் சோகம்

(படம்: AFP)

அமெரிக்க மக்கள் இன்று பின்னேரம் செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நாளை அனுசரிக்கவுள்ளனர்.

துயரம் நிறைந்த அந்தத் தாக்குதல் நடந்து 16 ஆண்டுகள் ஆகி விட்டன.

2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் மீது பயங்கரவாதிகள் விமானத்தைச் செலுத்தித் தாக்குதல் நடத்தினர்.

அதில் சுமார் மூவாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

(படம்: AFP)

உலக வரலாற்றில் அப்படியொரு தாக்குதல் முன்னர் நடத்தப்பட்டதில்லை.

இரட்டைக் கோபுரத் தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

(படம்: AFP)

தற்போது அமெரிக்காவுக்குப் பயங்கரவாத மிரட்டல் ஏதுமில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. என்றாலும், ஐரோப்பாவின் பல இடங்களில் அண்மையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. எனவே அமெரிக்காவிலும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்