Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஃபுளோரிடாவைப் புரட்டிப்போட்டுள்ள சூறாவளி

மக்கள் நெரிசல் குறைந்த ஃபுளோரிடாவின் மேற்குக் கரையோரம் இர்மா சூறாவளி நகர்ந்து வருவதால், குறைவான பாதிப்பே ஏற்படும். 

வாசிப்புநேரம் -
ஃபுளோரிடாவைப் புரட்டிப்போட்டுள்ள சூறாவளி

(படம் : REUTERS/Carlos Barria)

அமெரிக்காவின் ஃபுளோரிடாவைப் புரட்டிப் போட்டுள்ள இர்மா சூறாவளி "அரக்கத்தனமானது" என்று அதிபர் டோனல் டிரம்ப்  தெரிவித்துள்ளார்.

விரைவில் ஃபுளோரிடாவுக்குச் செல்லவிருப்பதாக அவர் கூறினார். 

மக்களைப் பாதுகாக்கும் பணியில் அயராமல் உழைத்து வரும் அவசரகாலப் பணியாளர்களுக்குத் திரு. டிரம்ப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். 

இர்மா சூறவாளி பெரும் பொருட்செலவை ஏற்படுத்தியுள்ளதாகச் சொன்ன அவர், அதை விட மக்களின் உயிர்களைப் பற்றியே தாம் அதிகம் கவலைப்படுவதாகக் கூறினார். 

மக்கள் நெரிசல் குறைந்த ஃபுளோரிடாவின் மேற்குக் கரையோரம் இர்மா சூறாவளி நகர்ந்து வருவதால், குறைவான பாதிப்பே ஏற்படும்.

இருப்பினும், அடுத்த 6 மணி நேரத்தைக் கடப்பது சிக்கலானது என்றும் திரு. ட்ரம்ப் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்