Images
  • British Parliament
    பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு வெளியில் தேசியக் கொடியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடியும். (படம்: Reuters)

பிரெக்சிட் மசோதாவுக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரிட்டனின் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பியத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர்.

பிரெக்சிட் தொடர்பான அரசாங்கத்தின் உத்தியில் இது முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.

13 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற விவாதத்திற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 326 பேர் மசோதாவுக்கு ஆதரவாகவும் 290 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

1972ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் இணைய வகைசெய்த சட்டத்தைப் புதிய மசோதா ரத்து செய்யும்.

உங்கள் கருத்து

Top