Images
  • pope
    போப் ஃபிரன்சிஸ். (படம்:  Reuters)

பருவநிலை மாற்றத்தால் மனித இனம் அழியக்கூடும்: போப்

பருவநிலை மாற்றத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் அதன் அறிவியலை ஏற்க மறுப்போர், அண்மையில் ஏற்பட்டுள்ள புயல்களைக் கண்டு உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்என்று போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான  பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மேற்கொள்ளாமல் இருந்தால் மனித இனம் அழியக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

கொலம்பியாவிலிருந்து வத்திகனுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது செய்தியாளர்களிடம் போப் பிரான்சிஸ் அவ்வாறு கூறினார்.

இர்மா சூறாவளி மத்திய ஃபுளோரிடாவை உலுக்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் போப் பிரான்சிஸ் அவ்வாறு கூறினார். ஃபுளோரிடாவில் மில்லியன் கணக்கானோருக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.  சாலைகளும் பலரின் வீடுகளும் சேதம் அடைந்துள்ளன.

உலக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்க மறுக்கும் தலைவர்கள், பின்பு ஏற்படும் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என போப் பிரான்சிஸ் எச்சரித்தார்.

உங்கள் கருத்து

Top