Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஃபிரெஞ்சு ரயில் நிலையத்தில் சுற்றுப்பயணிகள் மீது அமிலத்தை வீசிய மாது

ஃபிரான்ஸின் மார்சே ரயில் நிலையத்தில் இரு அமெரிக்கச் சுற்றுப்பயணிகள்மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

வாசிப்புநேரம் -
ஃபிரெஞ்சு ரயில் நிலையத்தில் சுற்றுப்பயணிகள் மீது அமிலத்தை வீசிய மாது

(படம்: AFP)

ஃபிரான்ஸின் மார்சே ரயில் நிலையத்தில் இரு அமெரிக்கச் சுற்றுப்பயணிகள்மீது அமிலத் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 20 வயதான இரு சுற்றுப்பயணிகளுக்கும் முகத்தில் வீசப்பட்ட அமிலத்தால் காயங்கள் ஏற்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவரும் நேற்று அங்கிருந்து வெளியேறினர்.

அமிலத் தாக்குதலின் போது அவர்களோடு இருந்த மற்ற இரு சுற்றுப்பயணிகள் காயங்கள் ஏதுமின்றி தப்பினர். சம்பவம் பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய 41-வயது மாது கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது

தாக்குதலை நடத்திய மாதுக்கும் அமிலத்தால் காயங்கள் ஏற்பட்டன.

அமெரிக்கச் சுற்றுப்பயணிகள் நால்வரும் ஐரோப்பாவுக்கு ஓராண்டுச் சுற்றுப்பயணம் வந்த பாஸ்ட்டன் பல்கலைக்கழக மாணவர்கள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்