Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இர்மாவின் தாக்கத்தால் சோர்வுற்ற சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்

சுமார் 17,000 பேர் தங்க இடமின்றி தவிக்கின்றனர். 

வாசிப்புநேரம் -
இர்மாவின் தாக்கத்தால் சோர்வுற்ற சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள்

(படம் : AP)

இர்மா சூறாவளியால், கரீபியன் தீவுகளில் சுமார் 17,000 பேர் தங்குமிடமின்றித் தவிப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அந்த வட்டாரத்தின் மருத்துவமனைகள், மருந்தகங்கள் அனைத்தும் சூறாவளியில் அழிவுற்றதாகக் கூறப்பட்டது.

குறைந்தது 40 பேர் மாண்டனர்.

கடுமையாகப் பாதிக்கப்பட்ட இடங்களில் நிலைமை மோசமாய் இருப்பதாக நிறுவனம் கூறியது.

சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களை மறு-நிர்மாணம் செய்யவேண்டும்.

அத்துடன், சூறாவளியால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சையைத் தொடரமுடியாத நோயாளிகளை அங்கிருந்து வெளியேற்றுவதும் அவசியம். 

தற்போது பணியிலிருக்கும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் முற்றிலும் சோர்வடைந்துவிட்டனர்.

அவர்களுக்குப் பதிலாக புதிய மருத்துவக் குழுக்களின் வரவு பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்