Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹெலிகாப்ட்டரை மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் நிறுத்திய விமானி

பசி வயிற்றைக் கிள்ளும் போது, எதையும் செய்யத் தூண்டும். அதைத்தான் செய்துள்ளார் சிட்னியைச் சேர்ந்த விமானி ஒருவர். 

வாசிப்புநேரம் -
ஹெலிகாப்ட்டரை மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் நிறுத்திய விமானி

(படம்: Twitter)

பசி வயிற்றைக் கிள்ளும் போது, எதையும் செய்யத் தூண்டும்.

அதைத்தான் செய்துள்ளார் சிட்னியைச் சேர்ந்த விமானி ஒருவர்.

தாம் செலுத்திக் கொண்டிருந்த ஹெலிகாப்ட்டரை மெக்டோனல்ட்ஸ் உணவகத்தின் வெளியே நிறுத்தி. உணவகத்திற்கு சென்று தமக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டார்.

உணவகத்தை விட்டு அவர் ஒரு பொட்டலத்தோடு வெளிவருவது காணொளியில் பதிவாகியுள்ளது.

தமது ஹெலிகாப்ட்டரை ஒரு படம் எடுத்த பின்னர் அவர் மீண்டும் அதைக் கிளப்பி ஜிவ்வென்று பறந்துவிட்டார்.

விமானி பூமிக்கு இறங்கியது, சொந்தப் பசியைத் தணித்துக் கொள்ளவா அல்லது புது மனைவிக்கு பர்கர் வாங்கவா என்பது தெரியவில்லை.

உணவகத்தின் வெளியே ஹெலிகாப்ட்டர் நிற்பதைக் கண்டு ஏதோ நெருக்கடிச் சூழல் என்றே கருதியதாகக் கூறினார் அருகிலிருந்த ஒருவர்.

சம்பவம் குறித்து ஆஸ்திரேலியப் பொது விமானப்போக்குவரவு ஆணையம் விசாரித்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்